1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By
Last Updated : வியாழன், 16 செப்டம்பர் 2021 (12:22 IST)

மைனர் பெண்ணைக் கர்ப்பமாக்கிய இளைஞர்…. போக்ஸோ சட்டத்தில் கைது!

சென்னையில் 17 வயது மைனர் பெண்ணை திருமணம் செய்துகொள்வதாக ஆசை வார்த்தைக் கூறி கர்ப்பமாக்கிய இளைஞர் சூர்யாவை போலிஸார் கைது செய்துள்ளனர்.

சென்னை மாங்காடு, வடக்கு மலையம்பாக்கத்தில் வசித்து வருபவர் சூர்யா என்ற இளைஞர். இவர் அதே பகுதியைச் சேர்ந்த 17 வயது பெண் ஒருவரோடு பழகி வந்துள்ளார். மேலும் அவரிடம் திருமண ஆசைகளைக் கூறி பாலியல் உறவுகொண்டு அவரைக் கர்ப்பமாக்கியுள்ளார்.

இந்நிலையில் இதையறிந்த அந்த சிறுமியின் பெற்றோர் விசாரித்ததில் சூர்யா ஏற்கனவே திருமணம் ஆனவர் என்பது தெரியவந்துள்ளது. இதையடுத்து அவர்கள் காவல் நிலையத்தில் புகார் கொடுக்கவே சூர்யா தலைமறைவாகியுள்ளார். போலிஸாரின் தேடுதலில் கைது செய்யப்பட்ட சூர்யா மீது இப்போது போக்ஸோ சட்டம் பாய்ந்துள்ளது.