திங்கள், 23 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By
Last Modified: வியாழன், 16 செப்டம்பர் 2021 (15:55 IST)

டாக்டர் படத்தையும் கைப்பற்றிய ரெட்ஜெயிண்ட்ஸ்… உதயநிதி காட்டில் அடைமழை!

உதயநிதியின் ரெட் ஜெயிண்ட் மூவிஸ் இப்போது பல படங்களை வாங்கி விநியோகம் செய்ய ஆரம்பித்துள்ளது.

நடிகர் சிவகார்த்திகேயனின் ‘டாக்டர்’ திரைப்படம் ஓடிடியில் ரிலீசாக பேச்சுவார்த்தை நடைபெற்று வருவதாக ஏற்கனவே செய்திகள் வெளியானது என்பதை பார்த்தோம். ஆனால் படத்தின் நாயகன் சிவகார்த்திகேயன் படம் திரையரங்கில் வெளியாவதையே விரும்புகிறார் என்றும் சொல்லப்பட்டது. இந்நிலையில் இன்று காலை இந்த படம் ஹாட்ஸ்டார் ஓடிடியில் வரும் ஆகஸ்ட் 15ஆம் தேதி ரிலீஸாகும் என்று செய்திகள் சமூகவலைதளங்களில் பரவின.

ஆனால் அதையெல்லாம் தயாரிப்பாளர் மறுத்தார். இந்நிலையில் இப்போது திரையரங்குகள் 50 சதவீத இருக்கைகளோடு இயங்கலாம் என அறிவிக்கப்பட்டு விட்டன. ஆனாலும் டாக்டர் படத்தின் ரிலிஸ் பற்றிய எந்த அறிவிப்பும் வெளியாகவில்லை. இந்நிலையில் இப்போது டிஸ்னி ப்ளஸ் ஹாட்ஸ்டாரில் வெளியாக வாய்ப்புள்ளதாக சொல்லப்படுகிறது. பொருத்தமான ஒரு பண்டிகை நாளில் ரிலீஸ் செய்ய பேச்சுவார்த்தை நடப்பதாக சொல்லப்படுகிறது.

இந்நிலையில் இந்த படத்தின் தமிழக திரையரங்க விநியோக உரிமையும் ரெட் ஜெயிண்ட் மூவிஸ் கைவசம் சென்றுள்ளதாக சொல்லப்படுகிறது. ஏற்கனவே அண்ணாத்த மற்றும் அரண்மனை 3 ஆகிய படங்களையும் இந்நிறுவனம் கைப்பற்றியுள்ளது குறிப்பிடத்தக்கது.