#ChillaChillaa பாடல் பதிவில் அஜித்துடன் வைஷாக்! வைரல் புகைப்படம்
தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர் அஜித்குமார். இவர், நடித்துவரும் துணிவு படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்த நிலையில் இந்த படத்தின் போஸ்ட் புரடக்சன் பணிகள் தீவிரமாக நடந்து வருகிறது. இதில், அஜித், மஞ்சுவாரியார் ஆகிய நடிகர்களின் டப்பிங் பணிகள் முடிந்துள்ளன.
சமீபத்தில், துணிவு பட இசையமைப்பாளர் ஜிப்ரான் படத்தின் முதல் சிங்கிள் பாடல் பற்றிய அப்டேட்டை கொடுத்தார். அதில் பாடல் ஆசிரியர் வைசாக் எழுதியுள்ள சில்லா சில்லா என்ற பாடலை அனிருத் குரலில் ஒலிப்பதிவு செய்துள்ளதாக அறிவித்திருந்தார்.
இப்பாடலை வெளியிடும் முனைப்பில் துணிவு படக்குழு உள்ள நிலையில், இன்று சில்லா சில்லா பாடலை எழுதிய வைசாக் நடிகர் அஜித்துடன் எடுத்துக் கொண்ட புகைப்படம் சமூகவலைதளங்களில் வைரலாகி வருகிறது.
இப்பாடல் நிச்சயம் யூடியூப்பில் சாதனை படைக்கும் எனவும் ரசிகர்கள் கொண்டாடுவதற்கு ஏதுவான ஜிப்ரான் இசையமைத்துள்ளதாகவும் கூறப்படுகிறது.
Edited by Sinoj