செவ்வாய், 24 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Mahendran
Last Modified: திங்கள், 21 நவம்பர் 2022 (16:52 IST)

திரைப்பட விழாவில் பங்கேற்க ஷகிலாவுக்கு தடை: ரசிகர்கள் அதிர்ச்சி

Shakila
மலையாள திரைப்பட விழாவில் கலந்து கொள்ள நடிகை ஷகிலாவுக்கு தடை விதிக்கப்பட்டதை அடுத்து அவரது ரசிகர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்
 
பிரபல மலையாள இயக்குனர் ஓமர் லூலு என்பவர் இயக்கிய நல்ல சமயம் என்ற படத்தின் டிரைலர் வெளியீட்டு விழா கேரளாவில் உள்ள கோழிக்கோடு வணிக வளாகத்தில் நடைபெற திட்டமிடப்பட்டிருந்தது.
 
இந்த திரைப்பட விழா ஷகிலா தலைமையில் நடக்க ஏற்பாடு செய்யப்பட்டிருந்த நிலையில் திடீரென விழாவுக்கு அனுமதி கொடுத்த வணிக வளாகம் அனுமதியை ரத்து செய்துவிட்டது
 
ஷகிலா இல்லாமல் இந்த விழாவை நடத்தலாம் என்றும் ஷகிலா கலந்து கொள்வதாக இருந்தால் இந்த விழாவுக்கு அனுமதி கிடையாது என்றும் வணிக வளாக நிர்வாகிகள் தெரிவித்துள்ளதாக கூறப்படுகிறது 
 
இதற்கு இயக்குனர் ஓமர் லூலு கடும் கண்டனத்தை தெரிவித்துள்ளார். இதுகுறித்து ஷகிலா கூறும்போது எனக்கு இதுபோல் நடப்பது முதல் முறை அல்ல என்றும் ரசிகர்கள் என்னை வரவேற்கிறார்கள் ஆனால் ஒரு சிலர் எனக்கு எதிராக செயல்படுகிறார்கள் என்று வருத்தத்துடன் தெரிவித்து உள்ளார்
 
Edited by Mahendran