ஞாயிறு, 28 ஏப்ரல் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By vinoth
Last Modified: திங்கள், 21 நவம்பர் 2022 (08:55 IST)

தமிழ் சினிமாவின் பழம்பெரும் கலைஞர் ஆரூர் தாஸ் மரணம்… முதல்வர் இரங்கல்!

தமிழ் சினிமாவில் 50 ஆண்டுகளுக்கும் மேலாக பல படங்களுக்கு கதை வசனம் எழுதி சாதனைப் படைத்த ஆரூர் தாஸ் இயற்கை எய்தியுள்ளார்.

தமிழ் சினிமாவில் கதை வசனம் எழுதுபவர்களுக்கு முக்கியத்துவம் இருந்த 50 கள் முதல் 70 கள் வரை பல படங்களுக்கு வசனம் எழுதியவர் ஆரூர் தாஸ். எம் ஜி ஆர், சிவாஜி முதல் கொண்டு அக்காலத்தைய முன்னணி கலைஞர்கள் பலரது படங்களுக்கும் இவர் கதை வசனம் எழுதியுள்ளார்.

1955 ஆம் ஆண்டு முதல் 2014 ஆம் ஆண்டு வரை நேரடி தமிழ்ப் படங்கள் மற்றும் டப்பிங் படங்கள் என 1000 க்கும் மேற்பட்ட படங்களில் இவர் பங்காற்றியுள்ளார் என்பது ஆச்சர்யப்பட வைக்கும் தகவல்.

இந்நிலையில் வயது மூப்புக் காரணமாக அவர் இன்று அதிகாலை உயிரிழந்துள்ளார். அவரது உடல் தி நகரில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ளது. இவரது மறைவுக்கு தமிழக முதல்வர் மு க ஸ்டாலின் இரங்கல் தெரிவித்து அறிக்கை வெளியிட்டுள்ளார். தமிழ் திரையுலகைச் சேர்ந்தவர்களும் மூத்தக் கலைஞருக்கு தங்கள் அஞ்சலிகளை தெரிவித்து வருகின்றனர்.