புதன், 25 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By siva
Last Modified: செவ்வாய், 23 மார்ச் 2021 (12:33 IST)

விருது பெறாதவர்களும் உன்னத கலைஞர்கள் தான்: வைரமுத்து

67 வது தேசிய விருதுகள் நேற்று அறிவிக்கப்பட்டது என்பதும் தனுஷ், வெற்றிமாறன், விஜய் சேதுபதி உள்பட பல தமிழ் கலைஞர்களுக்கும் விருது அறிவிக்கப்பட்டது என்பதும் தெரிந்ததே 
 
இந்த நிலையில் விருது பெற்ற அனைவருக்கும் தமிழ் திரையுலக பிரபலங்கள் வாழ்த்துக்களையும் பாராட்டுக்களையும் தெரிவித்து வருகின்றனர். அந்த வகையில் கவிஞர் வைரமுத்து தனது டுவிட்டர் பக்கத்தில் விருது பெற்றவர்களுக்கு தனது வாழ்த்தினை தெரிவித்ததோடு விருது பெறாத கலைஞர்களும் உன்னத கலைஞர்கள் தான் என்று தெரிவித்துள்ள
 
அவர் தனது டுவிட்டரில் கூறியிருப்பதாவது:
 
திரைப்பட தேசிய விருது பெறும்
அனைத்துக் கலைஞர்களையும் பாராட்டுகிறேன்.
 
சில உன்னதக் கலைஞர்கள்
விருது பெறாமல் போயிருக்கலாம்.
ஆனால், விருது பெற்ற அனைவரும்
உன்னதக் கலைஞர்கள்.
 
எல்லார்க்கும்
என் வளர்பிறை வாழ்த்துக்கள்.