செவ்வாய், 24 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By siva
Last Modified: திங்கள், 27 டிசம்பர் 2021 (07:40 IST)

நடிகர் வடிவேலுக்கு ஒமிக்ரானா? அமைச்சர் அதிர்ச்சி தகவல்

நடிகர் வடிவேலுக்கு ஒமிக்ரான் வைரஸ் பாதிப்பு இருக்கலாம் என அமைச்சர் மா சுப்பிரமணியன் அவர்கள் தெரிவித்துள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது
 
கடந்த சில நாட்களுக்கு முன்னர் வரை நடிகர் வடிவேலுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது என்பதும் இதனை அடுத்து அவர் போரூரில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார் என்பதை பார்த்தோம். 
 
இந்த நிலையில் தற்போது வந்த தகவலின் படி நடிகர் வடிவேலுக்கு ஒமிக்ரான் தொற்று இருக்கலாம் என சந்தேகம் உள்ளது என சுகாதாரத்துறை அமைச்சர் சுப்பிரமணியம் அவர்கள் தெரிவித்துள்ளார் 
 
அதேபோல் இயக்குனர் சுராஜ் அவர்களும் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட நிலையில் அவருக்கும் ஒமிக்ரான் இருக்கலாம் என தெரிகிறது. இருப்பினும் இருவருக்கும் ஒமிக்ரான் பாதிக்கப்பட்டுள்ளது என்பது பரிசோதனையின் முடிவு வெளிவந்த பின்னரே தெரியவரும் என்பது குறிப்பிடத்தக்கது