வியாழன், 23 ஜனவரி 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By siva
Last Updated : ஞாயிறு, 26 டிசம்பர் 2021 (16:59 IST)

தைப்பூச விழாவில் பக்தர்களுக்கு அனுமதி உண்டா?

தமிழகத்தில் கொரோனா வைரஸ் படிப்படியாக குறைந்து வந்தாலும் ஒமிக்ரான் வைரஸ் படிப்படியாக அதிகரித்து வருவதால் கூடுதல் கட்டுப்பாடுகள் விதிக்க வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது
 
இந்த நிலையில் ஒவ்வொரு ஆண்டும் பழனி முருகன் கோவிலில் தைப்பூச தினத்தில் ஏராளமான பக்தர்கள் காவடி சுமந்து வந்து தங்களது நேர்த்திக் கடனை செலுத்துவது வழக்கம் ஆனால் கடந்த இரண்டு ஆண்டுகளாக தைப்பூச தினத்தில் பக்தர்கள் அனுமதிக்கப்படாத நிலையில் இந்த ஆண்டு தைப்பூச தினத்தில் பக்தர்கள் அனுமதிக்கப்படுவார்களா என்ற கேள்வி எழுந்துள்ளது 
 
இந்த நிலையில் இது குறித்து இன்று நடைபெற்ற ஆலோசனைக் கூட்டத்தில் வழிபாட்டு நெறி முறைகளை பின்பற்றி தைப்பூச விழாவில் பக்தர்கள் அனுமதிக்க முடிவு செய்யப்பட்டிருப்பதாகவும் பக்தர்கள் வசதிக்காக கட்டணமில்லா நிறைய கழிவறை வசதிகளும் செய்து தர ஏற்பாடு செய்யப்பட்டிருப்பதாகவும் ஆலோசனைக் கூட்டத்தின் தலைவர் தெரிவித்துள்ளார்.