திங்கள், 23 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Papiksha Joseph
Last Updated : வெள்ளி, 22 ஜனவரி 2021 (14:45 IST)

தாய் பாசத்துல தங்கச்சி மகனை மிஞ்சிய சிம்பு - பாசமாக சோறு ஊட்டும் உஷா ராஜேந்தர்!

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகரான சிம்பு எப்போதும் சமூக வலைதளங்களில் ஆக்டிவாக இருப்பார். ரசிகர்களின் கேள்விகளுக்குப் பதில் கூறுவார். சுசீந்திரன் இயக்கத்தில் கடைசியாக அவர் நடித்த ஈஸ்வரன் படம் பொங்கலுக்கு வெளியாகியது. 
 
இந்நிலையில் தற்போது சிம்புக்கு அவரது தாய் உஷா ராஜேந்தர் சின்ன குழந்தை போன்று சோறு ஊட்டிவிடும் வீடியோ ஒன்று சமூகவலைத்தளங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது. இந்த வீடியோவில் அவரது தங்கை இலக்கியாவின் மகன் குறுக்கே வந்து நாட்டியாக பேசுவது இன்னும் இந்த வீடியோவிற்கு அழகூட்டுகிறது. அவனிடம் சிம்பு " உங்க அம்மா உனக்கு ஊட்டுறாங்க எங்கம்மா எனக்கு ஊட்டுறாங்க" என பேசுவது ரசிக்கும் படியாக உள்ளது.  இதோ அந்த வீடியோ