ஞாயிறு, 29 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By
Last Modified: செவ்வாய், 19 ஜனவரி 2021 (19:06 IST)

ஒல்லி பெல்லியாக மாறிய ஹன்சிகா! வைரலாகும் புகைப்படம்!

நடிகை ஹன்சிகா ஒல்லியாக மாறிய புகைப்படத்தை இணையத்தில் வெளியிட்டுள்ளார்.

ஒரு காலத்தில் தமிழ் சினிமாவில் மிகவும் பிசியான கதாநாயகியாக வலம் வந்து கொண்டிருந்தார் ஹன்சிகா மோத்வானி. ஆனால் ஒரு கட்டத்தில் அவருக்கான வாய்ப்புகள் குறைய ஆரம்பித்தன. இந்நிலையில் கதாநாயகிக்கு முக்கியத்துவம் உள்ள படமான மஹாவில் நடிக்க அவர் ஒப்பந்தமானார்.  இந்த படத்தில் அவரது முன்னாள் காதலரான சிம்பு சிறப்புத்தோற்றத்தில் நடித்து வங்தார். 'மகா' என்ற திரைப்படத்தின் படப்பிடிப்பு கடந்த சில மாதங்களாக நடைபெற்று வந்த நிலையில் கொரோனா லாக்டவுனால் இப்போது படப்பிடிப்பு நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.

மகா படத்தை தவிர வேறு படங்கள் இல்லாத நிலையில் ஹன்சிகாவை கோலிவுட்டே அவரை மறந்துவிட்டது. இந்நிலையில் இப்போது உடல் எடையை பல கிலோ குறைத்து இப்போது ஒல்லி பெல்லியாக மாறிய புகைப்படத்தை வெளியிட்டுள்ளார். இந்த புகைப்படம் இணையத்தில் கவனம் பெற்றுள்ளது.