திங்கள், 23 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Sinoj
Last Modified: வியாழன், 21 ஜனவரி 2021 (21:22 IST)

பெயரை மாற்றிய நடிகர் தனுஷ்...நெட்டிசன்கள் விமர்சனம் ! சிம்புவுக்கு கேள்வி ?

நடிகர் தனுஷ் தனது டுவிட்டர் பக்கத்தில் தனது புரொஃபைல் பெயரை அசுரன்…தனுஷ் என்று  மாற்றியுள்ளார். இதை தனுஷ் ரசிகர்கள் ரசித்தாலும் சமூக வலைதளங்கள் நெட்டிசன்கள் பல்வேறு கருத்துகளைக் கூறி வருகின்றனர்.

சமீபத்தில், நடிகர் சிம்பு நடிப்பில் வெளியான ஈஸ்வரன் படத்தில் இடம்பெற்றிருந்த பிரபல வசனமான ‘’நீ அழிப்பதற்கு வந்த அசுரன் என்றால் நான் காப்பதற்கு வந்த ஈஸ்வரன்’ என்று சிம்பு ஆவேசமாக வசனம் பேசும் ஒரு காட்சி உள்ளது.

இந்த காட்சி தனுஷ் ரசிகர்களை வம்புக்கு இழுப்பதற்காக வேண்டுமென்றே இடம்பெற்றிருப்பதாக ரசிகர்கள் இடையே வாக்குவாதம் நடைபெற்று வருவதால் சமூக வலைதளங்களில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

இது அனைத்து மீடியாக்களிலும் செய்தியாக இடம்பெற்றது என்றாலும்  இதற்குசிம்பு தரப்போ,தனுஷ் தரப்பிலோ எதுவும் விளக்கம் தரவில்லை.

இந்நிலையில் இன்று தனுஷ் தனது டுவிட்டர் பக்கத்தில் தனது புரொஃபைல் பெயரை அசுரன்…தனுஷ் என்று  மாற்றியுள்ளார்.

எனவே தனுஷ் ரசிகர்கள் , நடிகர் சிம்புவுக்கு டேக் செய்து எங்க உங்களது பெயரை நீங்கள் நடித்த படத்தின் பெயரை முன்னால் போட்டுக் காண்பியுங்கள் என கேட்டுள்ளனர்.

ஆனால் சிலர், சினிமாவை சினிமாவாகவே பார்க்கவேண்டுமென கூறி வருகின்றனர்.

மேலும் நடிகர் தனுஷின் அசுரன் படம் வெற்றி பெற்று ரூ.100 வசூல் செய்தது குறிப்பிடத்தகக்து.