செவ்வாய், 24 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Sinoj
Last Updated : வியாழன், 28 ஜனவரி 2021 (21:39 IST)

சிம்புவின் புதுப்பழக்கத்தால் சினிமாத்துறையினர் ஆச்சர்யம்!

தமிழ் சினிமாவில் இளம் நடிகர் சிம்பு. இவரது நடிப்பில் பொங்கலுக்கு வெளியான படம் ஈஸ்வரன். இப்படத்தை இயக்குநர் சுசீந்தரன் இயக்கினார். இப்படம் வெறும் 35 நாட்களில் ஹூட்டிங் எடுத்து முடிக்கப்பட்டதை அனைவரும்  வியந்து பாராட்டினர்.

இந்நிலையில் சிம்பு தற்போது வெங்கட் பிரபு இயக்கத்தில் மாநாடு படத்தில் நடித்து வருகிறார். அடுத்து தேசிய விருது இயக்குநர் ராம் இயக்கத்தில் நடிக்கவுள்ளார்.

இந்நிலையில், நடிகர் சிம்பு முதலில் படப்பிடிப்புக்குத் தாமதமாக வருவதாகப் புகார் கூறப்பட்ட நிலையில், இந்நிலையில் தற்போது அவர் ஆன்மீகத்தில் ஈடுபட்டுள்ளதால் அவர் முற்றிலும் மாறிவிட்டார்.

காலையில் 6 மணிக்கு ஹூட்டிங் என்றால் அதிகாலை 5 மணிக்கு செட்டுக்குச் சென்றுவிடுகிறாராம்.

சிம்புவின் இப்புதிய பழக்கத்தால் சினிமாத்துறையினர் ஆச்சர்யத்தில் மூழ்கியுள்ளார்.