மாஸ்டர் படத்தின் டிரைலர் அப்டேட் வெளியானது – ரசிகர்கள் உற்சாகம்!

Last Modified ஞாயிறு, 22 நவம்பர் 2020 (17:02 IST)

நடிகர் விஜய் நடிக்கும் மாஸ்டர் படத்தின் டிரைலர் கிறிஸ்துமஸ் பண்டிகையை முன்னிட்டு வெளியாகும் என சொல்லப்படுகிறது.

நடிகர் விஜய், விஜய் சேதுபதி நடிப்பில் நடிப்பில் உருவாகியுள்ள படம் மாஸ்டர்.
இந்த படம் ஏப்ரல் மாதமே ரிலீஸாக் வேண்டிய நேரத்தில் கொரோனா காரணமாக தள்ளிப்போய் கொண்டே உள்ளது. இப்படத்தின் டீசர் நவம்பர் 14 ஆம் தேதி தீபாவளி அன்று மாலை 6 மணிக்கு வெளியாகி பட்டையை கிளப்பியது. இந்தியாவிலேயே அதிக லைக்ஸ்கலைப் பெற்ற டீசர் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.


இந்நிலையில் படத்தின் மீதான எதிர்பார்ப்பு அதிகமாகியுள்ள நிலையில் மாஸ்டர் படத்தின் டிரைலர் இப்போது பரபரப்பாக ரெடியாகியுள்ளதாகவும், கிறிஸ்துமஸ் பண்டிகையை முன்னிட்டு இணையத்திலும் திரையரங்குகளிலும் வெளியாகும் எனவும் சொல்லப்படுகிறது.இதில் மேலும் படிக்கவும் :