வியாழன், 9 ஜனவரி 2025
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Sinoj
Last Updated : சனி, 21 நவம்பர் 2020 (17:05 IST)

விஜய்சேதுபதி பட ஷூட்டிங்கிலிருந்து வெளியேறிய முன்னணி நடிகை

கொரோனா காலத்தில் சில தளர்வுகளுடன் ஷூட்டிங் நடைபெற்று வருகிறது. இந்நிலையில் கொரொனா அச்சம் காரணமான விஜய் சேதுபதி படத்திலிருந்து வெளியேறியுள்ளார் ஸ்ருதிஹாசன்.

கடந்த 2015 ஆண்டு எஸ்பி ஜனநாதன் இயக்கத்தில் விஜய் சேதுபதி நடித்த புறம்போக்கு படத்தை அடுத்து தற்போது இருவரது கூட்டண்யில் மீண்டும் ஒரு படம் உருவாகிவருகிறது. இப்படத்திற்கு லாபம் என்ற பெயர் வைத்துள்ளனர்.

இப்படத்தில்  கலையரசன், ஜகபதிபாபு,  சாய் தன்ஷிகா, உத்தரன்,ஹரிஸ் உத்தமன் உள்ளிட்டோர் இப்படத்தில் நடித்து வருகின்றனர். டி. இமான் இசைமயமைத்து வருகின்றனர்.

இப்படத்தை விஜய்சேதுபதி புரொடெக்சன்ஸ் மற்றும்  இயகுநர் 7.சிஎஸ் எண்டர்டெயின்மெண்ட் இணைந்து இப்படத்தை தயாரித்து வருகின்றனர்.

இப்படத்தின் டிரெயிலர் ஏற்கனவே வெளியாகி நல்ல வரவேற்பைப் பெற்றுள்ள நிலையில் தற்போது இப்படத்தி கிளைமாக்ஸ் காட்சிகள் தர்மபுரி, கிருஷ்ணகிரி உள்ளிட்ட பகுதிகளில் நடைபெற்று வருகிறது.

மேலும், இன்று ஷுட்டிங் ஸ்பாட்டில் நடிகை ஸ்ருதிஹாசன் கொரொனா அச்சம் காரணமாக வெளியேறியுள்ளார்.

மேலும் இப்படப்பிடிப்புப் பகுதியில் மக்கள் கூட்டம் அலைமோதுவதல்  படக்குழு பெரும் சிரமத்தை மேற்கொண்டுள்ளது.

இதுகுறித்து ஸ்ருதிஹாசன் கூறியுள்ளதாவது:

கோவிட் என்பது எல்லொருடைய உடல்நலத்திற்கும் தீங்விளைவிக்கும் ஒன்று. நோய்த்தீவிரம்  இன்னும் முடியவில்லை. சரியாக விதிமுறைகளை பின்பற்றாதுவிட்டால் ஒருநடிகராக நான் பாதுகாப்பு மற்ரும் ஆரோக்கியத்துவத்திற்கு முக்கியத்துவம் அளிக்க உரிமை உண்டு எனத் தெரிவித்துள்ளார்.