லாபம் படப்பிடிப்பு தளத்தில் இருந்து வெளியேறக் காரணம் என்ன? ஸ்ருதிஹாசன் விளக்கம்!

Last Modified ஞாயிறு, 22 நவம்பர் 2020 (11:29 IST)

லாபம் படப்பிடிப்பு தளத்தில் இருந்து வெளியேறியது குறித்து சூசகமாக பதிலளித்துள்ளார் ஸ்ருதிஹாசன்.

எஸ்.பி. ஜனநாதன் இயக்கத்தில் புறம்போக்கு படத்துக்குப் பின் விஜய் சேதுபதி லாபம் எனும் படத்தில் நடிக்கிறார். இது கிராமப்புற பின்னணியைக் கொண்ட விவசாயம் பற்றிய படமாகும். இதில் கதாநாயகியாக ஸ்ருதி ஹாசன் நடித்து வருகிறார். இந்தப் படத்தின் படப்பிடிப்பு பெரும்பகுதி முடிந்த நிலையில் கொரோனா லாக்டவுனால் படப்பிடிப்பு தடைபட்டது. இப்போது தளர்வுகள் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் மீண்டும் இந்த படத்தில் நடிக்க தொடங்கியுள்ளார் விஜய் சேதுபதி.

படத்தின் கடைசி கட்ட படப்பிடிப்பாக விஜய் சேதுபதி மற்றும் ஸ்ருதிஹாசன் ஆகியோர் நடிக்கும் காட்சிகளை படமாக்கியுள்ளார் இயக்குனர். அப்போது தன்னைப் பார்க்க வந்த ரசிகர்களை சந்தித்து அவர்களை தொட்டும் கட்டிப்பிடித்தும் பேசியும் உள்ளார் விஜய் சேதுபதி. ஆனால் இதையெல்லாம் பார்த்து பாதுகாப்பு இல்லாமல் விஜய் சேதுபதி இப்படி நடந்துகொள்வதால் தனக்கும் தொற்று ஏற்பட வாய்ப்பு உள்ளதாக சொல்லி படப்பிடிப்பு தளத்தில் இருந்து வெளியேறி உள்ளதாக சொல்லப்படுகிறது.

இந்நிலையில் இந்த சம்பவம் குறித்து பேசியுள்ள ஸ்ருதிஹாசன் ‘கொரோனா தொற்று இன்னும் முடியவில்லை. ஒரு பெண்ணாக ஒரு நடிகையாக எனது உடலை பாதுகாக்க வேண்டிய உரிமை எனக்கு உள்ளது.’ எனத் தெரிவித்துள்ளார்.இதில் மேலும் படிக்கவும் :