திங்கள், 23 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By
Last Modified: ஞாயிறு, 22 நவம்பர் 2020 (16:21 IST)

அருண் விஜய் பிறந்தநாளுக்கு வனிதாவின் வாழ்த்து – ஆனால் கண்டுகொள்ளாத தம்பி!

பிறந்தநாளை முன்னிட்டு வனிதா விஜய்குமார் வாழ்த்து சொல்ல அதை கண்டுகொள்ளவே இல்லையாம் நடிகர் அருண் விஜய்.

நடிகர் அருண் விஜய்யின் தடம் படத்தின் வெற்றி அவர் மீது தமிழ் சினிமாவின் கவனத்தை ஈர்த்துள்ளது. இதையடுத்து அவர் வரிசையாக படங்களில் நடித்து வருகிறார். சமீபத்தில் அவர் நடிப்பில் மாபியா திரைப்படம் வெளியான நிலையில் நீண்டகாலமாக பாக்ஸர் என்ற திரைப்படம் உருவாக்கத்தில் உள்ளது. அதே போல நவீன் இயக்கத்தில் அக்னி சிறகுகள், அறிவழகன் இயக்கத்தில் பார்டர் மற்றும் தனது மாமா ஹரி இயக்கத்தில் ஒரு படம் என பிசியாக இருக்கிறார்.

இந்நிலையில் சில நாட்களுக்கு  முன்னர் அவர் தன் பிறந்தநாளைக் கொண்டாடிய நிலையில் திரைத்துறையினரும் ரசிகர்களும் பிறந்தநாள் வாழ்த்துகளைக் கூறினர். அதில் அவரின் சகோதரி வனிதா விஜய்குமாரும் ஒருவர். ஆனால் சகோதரியின் வாழ்த்துக்கு அருண் விஜய் எந்த ரியாக்‌ஷனும் காட்டவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.