வியாழன், 23 ஜனவரி 2025
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By siva
Last Modified: புதன், 14 செப்டம்பர் 2022 (09:27 IST)

மாமன்னன் படப்பிடிப்பு நிறைவு: கேக் வெட்டிய கொண்டாடிய படக்குழு!

Mamannan
உதயநிதி ஸ்டாலின் நடிப்பில் மாரி செல்வராஜ் இயக்கத்தில் உருவான மாமன்னன் என்ற திரைப்படத்தின் படப்பிடிப்பு கடந்த சில மாதங்களாக நடைபெற்று வந்தது. இந்த நிலையில் இந்த படத்தின் படப்பிடிப்பு விரைவில் நிறைவடையும் என்று படக்குழுவினர் தகவல் அளித்த நிலையில் நேற்று இந்த படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்ததாக கூறப்படுகிறது 
 
மேலும் படப்பிடிப்பு முடிவடைந்ததை அடுத்து பிரமாண்டமான கேக் வெட்டி படக்குழுவினர் தங்களது மகிழ்ச்சியை கொண்டாடினர். நேற்று வைகைப்புயல் வடிவேலு பிறந்தநாள் கொண்டாட்டமும் படப்பிடிப்பு தளத்தில் கொண்டாடப்பட்டது என்பதும் இதில் உதயநிதி ஸ்டாலின் கீர்த்தி சுரேஷ் மாதிரி செல்வராஜ் உள்பட படக்குழுவினர் கலந்து கொண்டு வடிவேலுக்கு பிறந்தநாள் வாழ்த்துக்களை தெரிவித்தனர் என்பது குறிப்பிடத்தக்கது 
 
மாமன்னன் படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்ததை அடுத்து விரைவில் தொழில்நுட்ப பணிகள் ஆரம்பிக்கப்படும் என்றும் இந்த ஆண்டு இறுதியில் இந்த படத்தை வெளியிட படக்குழுவினர் திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது
 
உதயநிதி ஸ்டாலினின் ரெட் ஜெயன்ட் மூவிஸ் நிறுவனம் தயாரித்த இந்த படத்திற்கு இசைப்புயல் ஏ ஆர் ரகுமான் அவர்கள் இசையமைத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது