1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By siva
Last Modified: திங்கள், 5 செப்டம்பர் 2022 (17:48 IST)

ஜெயம் ரவியின் அடுத்த படத்தில் இணைந்த அனுபமா பரமேஸ்வரன்!

anupama
ஜெயம் ரவி நடிக்கும் அடுத்த திரைப்படத்தில் அனுபமா பரமேஸ்வரன் இணைந்து உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளன.
 
 ஜெயம் ரவி நடிக்கும் அடுத்த திரைப்படத்தை அந்தோணி பாக்யராஜ் என்பவர் இயக்க உள்ளார் என்பதும் இந்த படத்திற்கு ’சைரன்’ என்ற டைட்டில் வைக்க பட்டது என்பதும் தெரிந்ததே 
 
ஜெயம் ரவி ஜோடியாக கீர்த்தி சுரேஷ் நடிக்க இருக்கும் படத்திற்கு ஜிவி பிரகாஷ் இசையமைக்க உள்ளார். ஜெயம் ரவியின் மாமியார் சுஜாதா தயாரிப்பில் உருவாகயிருக்கும் இந்த படம் அவரது 31வது படமாக உருவாக உள்ளது 
 
இந்த நிலையில் இந்த படத்தின் படப்பிடிப்பு மிக விரைவில் தொடங்க உள்ள நிலையில் இந்த படத்தில் அனுபமா பரமேஸ்வரன் இணைந்து உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த அறிவிப்பு அவரது ரசிகர்களுக்கு பெரும் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது
.