திங்கள், 23 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Sinoj
Last Modified: புதன், 31 ஆகஸ்ட் 2022 (17:43 IST)

உதயநிதியின்''ரெட் ஜெயிண்ட் மூவிஸ்'' ஒரு முக்கிய அறிவிப்பு!

ரெட் ஜெயிண்ட் மூவிஸ் நிறுவனம் ஒரு முக்கிய அறிவிப்பு வெளியிட்டுள்ளது.

தமிழ் சினிமாவில் நடிகரும் தயாரிப்பாளருமான உதய நிதி ஸ்டாலினின் நிறுவனம் ரெட் ஜெயிண்ட் மூவிஸ். இந்த நிறுவனம் சார்பில்  விஜய்யின் குருவி, சூர்யாவின் ஆதவன் உள்ளிட்ட பல படங்களை தயாரித்துள்ளார்.

சமீபத்தில், கமல் தயாரித்து  நடித்த விக்ரம் படத்தை  உதய  நிதியின் ரெட் ஜெயிண்ட் நிறுவனம்  திரையரங்குகளில்  வெளியிட்டிருந்தது. இப்படத்திற்கு நல்ல  வசூல் குவித்ததை அடுத்து, கமல்- ஷங்கரின்  இணைந்து உருவாகி வரும் இந்தியன் 2 படத்தைத் தயாரிக்கவுள்ளதாக உதய நிதி தெரிவித்தார். அதன்படி, சமீபத்தில் இப்படத்தின் போஸ்டர் வெளியாகி வைரலானது.

இந்த நிலையில் தற்போது ரெட் ஜெய்ண்ட் மூவிஸ் தனது டிவிட்டர் பக்கத்தில், நாளை காலை 11 மணிக்கு எதிர்பார்ப்புக்குரிய அறிவிப்பு வெளியாகும் என அறிவித்துள்ளது. இது புதிய படமாகவும் முன்னணி நடிகர்களின் படங்களாக இருக்கலாம் என ரசிகர்கள் எதிர்பார்த்துள்ளனர்.