வெள்ளி, 26 ஏப்ரல் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By
Last Modified: புதன், 28 செப்டம்பர் 2022 (15:58 IST)

கமல் தயாரிப்பில் உதயநிதி நடிக்கும் படம்… மிசாவில் ஸ்டாலின் கைதானதை தழுவிய கதையா?

உதயநிதி ஸ்டாலின் நடிப்பில் கமல் தயாரிக்கும் படத்தின் மீதான எதிர்பார்ப்பு அதிகமாக உள்ளது.

உலகநாயகன் கமல்ஹாசன் நடித்த விக்ரம் திரைப்படத்தை தமிழகத்தில் உதயநிதியின் ரெட் ஜெயன்ட் மூவீஸ் நிறுவனம் வெளியிட்டது என்பதும் இந்த படம் மிகப்பெரிய வெற்றி பெற்றது என்பதையும் ஏற்கனவே பார்த்தோம். இந்த நிலையில் தற்போது கமல்ஹாசன் மற்றும் உதயநிதி மீண்டும் இணைய இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. 

கமல்ஹாசனின் ராஜ்கமல் இண்டர்நேஷனல் பிலிம்ஸ் நிறுவனத்தின் தயாரிப்பில் உதயநிதி ஒரு திரைப்படத்தில் நடிக்க இருப்பதாகவும் இந்த படம் குறித்த அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்றும் கூறப்படுகிறது. இந்த படம் ராஜ்கமல் பிலிம்ஸின் 54வது தயாரிப்பு என்பது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில் இந்த படத்தின் கதை மிசாவில் தற்போதைய தமிழக முதலமைச்சர் மு க ஸ்டாலின் கைதானதை ஒட்டி உருவாக்கப்பட்டுள்ளதாகவும், அதில் ஸ்டாலின் வேடத்தில் உதயநிதி நடிக்க உள்ளதாகவும் சொல்லப்படுகிறது. இந்த படத்தை இயக்குனர் பிரசாந்த் முருகேசன் இயக்க உள்ளதாக சொல்லப்படுகிறது.