வியாழன், 28 மார்ச் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Mahendran
Last Modified: செவ்வாய், 27 செப்டம்பர் 2022 (20:17 IST)

கமல் திரைக்கதை தாப்பாகிடுச்சு, புதிய வடிவில் ரிலீஸ் ஆகிறது ‘ஆளவந்தான்’: தாணு தகவல்

thaanu
தமிழ் திரைக்கதை தப்பாகிவிட்டது என்றும் புதிய வடிவில் ஆளவந்தான் திரைப்படம் விரைவில் ரிலீசாக இருப்பதாகவும் தயாரிப்பாளர் தாணு தெரிவித்துள்ளார். 
 
தயாரிப்பாளர் தாணு தயாரிப்பில் கமல்ஹாசன் நடித்த ஆளவந்தான் என்ற திரைப்படம் கடந்த 2001ஆம் ஆண்டு வெளியானது. இந்த படம் மிகப்பெரிய தோல்வி அடைந்தது என்பது குறிப்பிடத்தக்கது
 
இந்த நிலையில் ஆளவந்தான் படத்தை உருவாக்கும் நேரத்தில் கமல்ஹாசனின் திரைக்கதை தப்பாகி விட்டது என்றும் தற்போது அதை சரி செய்து புதிய வடிவம் கொடுக்கப்பட்டு உள்ளது என்றும் இரண்டு மணி நேரம் தான் படம் ஓடும் என்றும் படம் தலைதெறிக்க ஓடும் என்றும் ஆளவந்தான் படத்தின் ரிலீஸ் குறித்து தயாரிப்பாளர் தாணு தெரிவித்துள்ளார்
 
விரைவில் இந்த படத்தின் ரிலீஸ் தேதி வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.