செவ்வாய், 24 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By
Last Modified: திங்கள், 26 செப்டம்பர் 2022 (15:00 IST)

மாரி செல்வராஜ் இயக்கத்தில் ஒரு வெப் சீரிஸ்… பரபரப்பாக நடக்கும் வேலை!

இயக்குனர் மாரி செல்வராஜ் இயக்கத்தில் ஒரு வெப் சீரிஸ் உருவாக உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

இயக்குனர் மாரி செல்வராஜ் கர்ணன் படத்தின் வெற்றிக்குப் பிறகு இப்போது உதயநிதி ஸ்டாலின் நடிப்பில் ஒரு படத்தை இயக்கி வருகிறார். இந்த படத்தில் வடிவேலு, பஹத் பாசில், கீர்த்தி சுரேஷ் ஆகியோர்  முக்கியக் கதாபாத்திரத்தில் நடிக்க, ஏ ஆர் ரஹ்மான் இசையமைக்கிறார். சமீபத்தில் இந்த படத்தின் படப்பிடிப்பு நிறைவு பெற்றது.

இந்நிலையில் அடுத்து மாரி செல்வராஜ் துருவ் விக்ரம் இயக்கத்தில் ஒரு படத்தை இயக்குவார் என்று சொல்லப்பட்டது. ஆனால் அதற்கு முன்பாக அவர் டிஸ்னி ப்ளஸ் ஹாட்ஸ்டாருக்காக ஒரு வெப் தொடரை இயக்க உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இதற்காக இப்போது பணிகள் தொடங்கப்பட்டுள்ளதாக சொல்லப்படுகிறது. இந்த தொடரில் கலையரசன் கதாநாயகனாக நடிக்க உள்ளதாக சொல்லப்படுகிறது.