1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By siva
Last Modified: திங்கள், 26 செப்டம்பர் 2022 (15:59 IST)

உதயநிதியின் ‘மாமன்னன்’ ஓடிடி ரிலீஸ் உரிமையை பெற்ற நிறுவனம்!

Mamannan
உதயநிதி நடிப்பில் மாரி செல்வராஜ் இயக்கத்தில் உருவாகியுள்ள ‘மாமன்னன்’ என்ற படத்தின் படப்பிடிப்பு சமீபத்தில் முடிவடைந்த நிலையில் இந்த படத்தின் போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் தற்போது விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. 
 
இந்த நிலையில் அடுத்த ஆண்டு இந்த படத்தை ரிலீஸ் செய்ய படக்குழுவினர் திட்டமிட்டுள்ளனர். இந்த படத்தின் வியாபாரத்தை தற்போது தொடங்கி விட்டதாக தகவல் வெளியாகி உள்ளன
 
குறிப்பாக ‘மாமன்னன்’ திரைப்படம் திரையரங்குகளில் ரிலீஸ் ஆனாலும் அதன் பின்னர் ஓடிடி ரிலீஸ் உரிமையின் வியாபாரம் தற்போது நடந்து முடிந்துள்ளது. இந்த படத்தின் ஓடிடி ரிலீஸ் உரிமையை நெட்பிளிக்ஸ் நிறுவனம் வாங்கியிருப்பதாக கூறப்படுகிறது. 
 
உதயநிதி ஸ்டாலின், பகத் பாசில், கீர்த்தி சுரேஷ், வடிவேலு உள்ளிட்ட பலரது நடிப்பில் உருவாகியிருக்கும் இந்த படத்திற்கு இசைப்புயல் ஏ ஆர் ரகுமான் இசையமைத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது