திங்கள், 23 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By siva
Last Updated : செவ்வாய், 27 செப்டம்பர் 2022 (09:18 IST)

கமல்ஹாசனை சந்தித்த இங்கிலாந்து எம்பி.. அரசியல் பேசியதாக தகவல்!

kamal lord
கமல்ஹாசனை சந்தித்த இங்கிலாந்து எம்பி.. அரசியல் பேசியதாக தகவல்!
உலக நாயகன் நடிகர் மற்றும் மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவரான கமல்ஹாசனை இங்கிலாந்து எம்பி அவருடைய இல்லத்தில் சந்தித்ததாக தகவல் வெளியாகியுள்ளன.
 
இங்கிலாந்து எம்பி லார்ட் வேவர்லி என்பவர் கமல்ஹாசன் இல்லத்தில் அவரைச் சந்தித்தார். இந்த சந்திப்பின்போது இந்திய மற்றும் தமிழக அரசியல் குறித்தும் உள்நாடு வெளிநாடு பொருளாதார சிக்கல்கள் குறித்து பேசியதாக தகவல்கள் வெளியாகியுள்ளன
 
இந்த சந்திப்பு குறித்து கமல்ஹாசன் கூறியபோது நம்முடைய மக்கள் மற்றும் உலக மக்களின் வளர்ச்சி குறித்து உலகத் தலைவர்களுடன் விவாதித்து வரும் நிலையில் இங்கிலாந்து எம்பி லார்ட் அவர்களையும் சந்தித்து அதுகுறித்து விவாதித்தேன் 
 
லார்ட் வேவர்லி என்னை சந்தித்ததற்கு மிகவும் நன்றிம் மீண்டும் அவரை சந்திப்பேன் என்று தெரிவித்துள்ளார். இந்த சந்திப்பின் போது தமிழகம் மற்றும் இங்கிலாந்து அரசியல் குறித்து இருவரும் பேசியதாக தகவல் வெளியாகி உள்ளன