1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Sinoj
Last Modified: செவ்வாய், 12 ஏப்ரல் 2022 (22:57 IST)

பீஸ்ட் படம் திரையிடுவதில் சிக்கல் - ரசிகர்கள் ஏமாற்றம்

beast
கரூர் மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் பீஸ்ட் படம் திரையிடுவதில் சிக்கல் - திரையரங்கு உரிமையாளர்கள் அதிரடி அறிவிப்பால் ரசிகர்கள் ஏமாற்றம்.
 
தமிழ் புத்தாண்டு அன்று தமிழர்களுக்கு சோகமா உடனே  நடவடிக்கை எடுக்க ரசிகர் மன்றம் வேண்டுகோள்
 
திரையுலகின் தளபதி என்று அழைக்கப்படும் நடிகர் விஜய் அவர்களின் பீஸ்ட்  படம் தமிழ் புத்தாண்டையொட்டி முதல் நாளே அதாவது ஏப்ரல் 13 ஆம் தேதியே வெளியாகும் தருணத்தில் கரூர் மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் உள்ள திரையரங்குகளில் பீஸ்ட் படம் வெளியாகாது என்று, செய்தி வெளியானது. இந்நிலையில் ஆங்காங்கே அலப்பறை செய்துவரும் விஜய் ரசிகர்கள் தற்போது சோகத்தில் ஆழ்ந்துள்ளனர். இந்நிலையில்., ஆங்காங்கே புதிய உற்சாகத்துடன் காணப்பட்ட விஜய் ரசிகர்கள், தற்போது மிகுந்த மன உளைச்சலிலும், வருத்தத்தில் ஆழ்ந்துள்ளனர். இந்நிலையில், கரூர் மாவட்டத்திற்குட்பட்ட, குளித்தலை மற்றும் அரவக்குறிச்சி ஆகிய பகுதிகளில் செயல்படும் இரண்டு திரையரங்குகளில் மட்டும் இந்த பீஸ்ட் படம் வெளியாக உள்ளது. இந்நிலையில், விஜய் ரசிகர்கள் மன்ற கரூர் மாவட்டத்தலைவர் மதியழகன் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது, நடிகர் விஜய் அவர்களது படத்தின் பர்ஸ்ட் லுக் வெளியிடப்பட்டது முதல் நாங்கள், அயராது எதிர்பார்த்து கொண்டிருக்கின்றோம், ஆகவே, கரூர் மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் உள்ள திரைப்பட உரிமையாளர்கள் சங்கத்தினர் கூட்டு நடவடிக்கை எடுத்து கரூர் மாநகரில் வெளியிட ஏதேனும் முயற்சி செய்ய வேண்டுமென்றும் கேட்டு கொண்டார். இந்நிலையில், இதற்கு முன்னர் வந்த மாஸ்டர், அண்ணாத்தே ஆகிய திரைப்படங்களை விட அதிகமாக கூடுதல் விலை கேட்பதினால், எங்களால் திரைப்படம் வெளியிட முடியவில்லை என்று கூறுகின்றனர்.