வியாழன், 23 ஜனவரி 2025
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Sinoj
Last Modified: திங்கள், 7 பிப்ரவரி 2022 (15:19 IST)

'பீஸ்ட்’ பட அப்டேட் வெளிட்ட விஜய்யின் அம்மா !

உருவாக்கியுள்ள பீஸ்ட் படத்தின் முக்கிய தகவலை விஜய்யின் அம்மா ஷோபா வெளியிட்டுள்ளார்.

தளபதி விஜய் நடிப்பில் இயக்குனர் நெல்சன் இயக்கத்தில் சன் பிக்சர்ஸ் நிறுவனத்தின் பிரமாண்டமான தயாரிப்பில் அனிருத் இசையில் உருவாகியுள்ள திரைப்படம் ‘பீஸ்ட்’

இந்த படத்தின் படப்பிடிப்பு சமீபத்தில் முடிவடைந்த நிலையில் தற்போது இறுதிகட்ட போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் நடைபெற்று வருவதாகவும் விரைவில் இந்த படம் ரிலீசுக்கு தயாராகி விடும் என்று கூறப்படுகிறது.

இந்த நிலையில் சற்று முன்னர் சன் பிக்சர்ஸ் நிறுவனத்தின் டுவிட்டர் பக்கத்தில் பீஸ்ட் படத்தின் அப்டேட் இன்று மாலை 6 மணிக்கு வெளியாகும் என அறிவிக்கப்பட்டது. அனேகமாக ‘பீஸ்ட்’ படத்தின் சிங்கிள் பாடல் ரிலீஸ் தேதி அல்லது படத்தின் ரிலீஸ் தேதி அறிவிக்கப்பட வாய்ப்பு இருப்பதாக கூறப்பட்ட நிலையில், தற்போது நடிகர் விஜய்யின் அம்மா ஷோபா தனது டுவிட்டர் பக்கத்தில்,   படத்தின் புரோமோ லோட் ஆகிவருவதாகத் தெரிவித்துள்ளார்.

இதனால் விஜய் ரசிகர்கள் மிகுந்த உற்சாகம் அடைந்துள்ளனர். இன்று சமூகவலைதளங்களில் பீஸ்ட் திருவிழா தான்.