1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By vinoth
Last Modified: சனி, 15 மார்ச் 2025 (14:12 IST)

விஷ்ணு விஷால் & ராம்குமார் இணையும் படத்தின் முதல் லுக் போஸ்டர் ரிலீஸ் அப்டேட்!

விஷ்ணு விஷால் மற்றும் ராம்குமார் கூட்டணியில் உருவான முண்டாசுப்பட்டி திரைப்படம் மிகப்பெரிய வெற்றிப்படமாக அமைந்தது. அதன் பின்னர் அவர்கள் கூட்டணியில் உருவான ராட்சசன் திரைப்படமும் மிகப்பெரிய வெற்றிப்படமாக அமைந்தது. இதையடுத்து நான்கு ஆண்டு இடைவெளிகளுக்குப் பிறகு இந்த கூட்டணி மூன்றாவது முறையாக இணைந்தது.

இந்த படத்தை சத்யஜோதி பிலிம்ஸ் தயாரிக்க ஒப்பந்தம் ஆனது. இது ஒரு காதல் பேண்டஸி திரைப்படம் என சொல்லப்படுகிறது. இந்த படத்தின் ஷூட்டிங் இரண்டு ஆண்டுகளுக்கு முன்பே தொடங்கினாலும் இதுவரை முடிந்ததாக தெரியவில்லை.

இந்நிலையில் இப்போது இந்த படத்தின் முதல் லுக் போஸ்டர் பற்றிய அறிவிப்பு வெளியாகியுள்ளது. இன்று மாலை 6.30 மணிக்கு வெளியாகும் என தயாரிப்பு நிறுவனமான சத்யஜோதி பிலிம்ஸ் அறிவித்துள்ளது.