செவ்வாய், 24 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Sinoj
Last Modified: செவ்வாய், 29 மார்ச் 2022 (18:23 IST)

விஜய்யின்'' பீஸ்ட்'' படம் பார்ப்பேன்-; ''KGF'' பட ஹீரோ நடிகர் யாஷ்

கே.ஜி.எஃப் பட டிரைலர் ரிலீஸின்போது, நடிகர் யாஷ்,  நடிகர் விஜய் பற்றி கூறியுள்ளார்.

தளபதி விஜய் நடிப்பில் நெல்சன் இயக்கத்தில் அனிருத் இசையில் சன் பிக்சர்ஸ் நிறுவனத்தின் தயாரிப்பில் உருவாகியுள்ளன பீஸ்ட் திரைப்படம் வரும் ஏப்ரல் 13 ஆம் தேதி ரிலீசாக உள்ளது என்பது தெரிந்ததே. இந்நிலையில் இந்த படம் தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், இந்தி என 5 மொழிகளில் ரிலீஸ் ஆக இருப்பதாக படக்குழு உறுதி செய்துள்ளது.

தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், இந்தி என 5 மொழிகளில் பீஸ்ட் ரிலீஸ் ஆக இருப்பதாக படக்குழு உறுதி செய்துள்ள நிலையில் இதன் இந்திப் பதிப்பின் பெயரை ரா எனப் படக்குழு மாற்றியுள்ளது.

வரும் ஏப்ரல் 14 ஆம் தேதி உலகம் முழுவதும் நடிகர் யாஷ் நடித்துள்ள கே.ஜி.எஃப் பட ரிலீஸாகவுள்ளது. இதன் டிரைலர் வெளியீட்டு விழாவின் பேசிய நடிகர் யாஷ் KGF vs vs BEAST அல்ல; KGF and abeast .                    இது தேர்தல் அல்ல . இது சினிமா என்பதா, விஜய் சார்  மீது எனக்கு நிறைய மரியாதை உள்ளது. நான் கண்டிப்பாக பீஸ்ட் படம் பார்ப்பேன். அதேபோல் விஜய் சார் ரசிகர்களும் kgf படம் பார்ப்பார்கள் என நம்புகிறேன் எனத் தெரிவித்துள்ளார்.