ஞாயிறு, 3 டிசம்பர் 2023
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Sinoj
Last Updated : புதன், 22 டிசம்பர் 2021 (17:15 IST)

'பீஸ்ட்' படத்தின் அடுத்த அப்டேட்...விஜய் ரசிகர்கள் மகிழ்ச்சி

பீஸ்ட் படத்தின் அடுத்த அப்டெட் வெளியாகியுள்ளது. இதனால் ரசிகர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

இயக்குனர் நெல்சன் இயக்கத்தில், தளபதி விஜய்- பூஜா ஹெக்டே ஆகியோர் நடிப்பில் உருவாக்கி வரும் படம் பீஸ்ட். மிக பிரமாண்டமாக உருவாக்கி வரும் இப்படம் இந்த  ஆண்டில் மிகப் பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளது.

இந்நிலையில் இப்படத்தில் ஷூட்டிங் சமீபத்தில் முடிவடைந்துள்ளது. ஷூட்டிங் கடைசி  நாளன்று இயக்குனர் நெல்சன் மற்றும் விஜய் இருவரும் நட்புடன்  கட்டியணைத்துக் கொள்ளும் புகைப்படம்  வைரலானது. இப்படத்தின் புரமோஷன் வீடியோ விரைவில் வெளியாகும் எனக் கூறப்படுகிறது.

இந்நிலையில், பீஸ்ட் படத்தில் தனது டப்பிங் பணியை நடிகர் விஜய்    நிறைவு செய்துள்ளதாக தகவல் வெளியாகிறது.

மேலும், சில  நாட்களுக்கு முன் பீஸ்ட் படத்தின் சண்டைக் காட்சிகள் படப்பிடிப்பு தளத்தில் எடுக்கப்பட்ட படம் ஒன்று இணையதளத்தில் லைரலானது குறிப்பிடத்தக்கது.