புதன், 25 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By
Last Modified: செவ்வாய், 9 அக்டோபர் 2018 (08:32 IST)

96 தெலுங்கு ரீமேக்கிலும் த்ரிஷா! சமந்தா விலகியதாக தகவல்

கடந்த சில ஆண்டுகளாக த்ரிஷா நடித்த படங்கள் பாக்ஸ் ஆபிசில் சுமாரான வெற்றியை பெற்றாதால் ராசியில்லாத நடிகைகள் பட்டியலுக்கு தள்ளப்பட்ட நிலையில் '96' என்ற ஒரே படத்தின் வெற்றி அவரை மீண்டும் உச்சத்திற்கு கொண்டு சென்றுள்ளது.

இந்த படத்தில் விஜய்சேதுபதி மற்றும் த்ரிஷாவின் நடிப்புக்கு பாராட்டுக்கள் குவிந்து வருகிறது. குறிப்பாக த்ரிஷா மிக இயல்பாக கேரக்டருடன் ஒன்றி நடித்திருந்ததால் அவரது நடிப்பை பாராட்டாதவர்களே இல்லை எனலாம்

இந்த நிலையில் இந்த படத்தின் தெலுங்கு ரீமேக் உரிமையை பெற்ற தயாரிப்பாளர் தில்ராஜூ, இந்த படத்தில் நானி மற்றும் சமந்தாவை நடிக்க வைக்க திட்டமிட்டிருந்தார். ஆனால் தற்போது த்ரிஷாவுக்கு குவிந்து வரும் பாராட்டுக்களை அடுத்து தெலுங்கிலும் த்ரிஷாவே நடிக்கவிருப்பதாக செய்திகள் வெளிவந்துள்ளது. இதுகுறித்த அறிவிப்பு விரைவில் வரவுள்ளது. சமந்தா தற்போது தனது கணவருடன் ஓய்வில் இருப்பதால் அவர் இந்த படத்தில் நடிக்க வாய்ப்பில்லை என்றே தெரிகிறது.