திங்கள், 30 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By
Last Modified: வெள்ளி, 5 அக்டோபர் 2018 (22:38 IST)

விஜய்சேதுபதியின் அடுத்த பட நாயகி ஸ்ருதிஹாசனா?

விஜய்சேதுபதிக்கு ஜோடியாக நடிக்க ஒருகாலத்தில் முன்னணி நடிகைகள் தயங்கியதுண்டு. ஆனால் அவரது அசுர வளர்ச்சியை பார்த்து பின்னர் பெரிய நடிகைகளும் அவருக்கு ஜோடியாக நடித்தனர்.

‘நானும் ரவுடிதான்’, ‘இமைக்கா நொடிகள்’ ஆகிய படங்களில் நயன்தாராவும், '96' படத்தில் த்ரிஷாவும், சூப்பர் டீலக்ஸ் படத்தில் சமந்தாவும், தர்மதுரை படத்தில் தமன்னாவும்,  விஜய்சேதுபதியுடன் இணைந்து நடித்த நிலையில் தற்போது விஜய்சேதுபதியின் அடுத்த படத்தில் கமல்ஹாசனின் மகள் 'ஸ்ருதிஹாசன் நடிக்கவுள்ளதாக செய்திகள் வெளிவந்துள்ளது.

அஜித், விஜய், சூர்யா, தனுஷ், விஷால், ஆகிய முன்னணி நடிகர்களுடன் ஜோடியாக நடித்துள்ள ஸ்ருதிஹாசன், விஜய்சேதுபதி நடிக்கும் அடுத்த படத்தில் நடிக்க பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு வருவதாகவும் இதுகுறித்த தகவல் மிக விரைவில் அறிவிக்கப்படவுள்ளதாகவும் செய்திகள் வெளிவந்துள்ளது.