திங்கள், 23 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By VM
Last Updated : திங்கள், 8 அக்டோபர் 2018 (11:23 IST)

விஜய் சேதுபதி-த்ரிஷா நடித்த 96 படத்தின் பாக்ஸ் ஆபிஸ் ரிப்போர்ட்

அண்மை காலமாக தமிழ் சினிமாவில் அதிகப்படியான படங்கள் குறைந்த நாட்களுக்குள் அடுத்தடுத்து வெளியாகி வருகிறது. இதனால் வசூல் பாதிப்பு ஏற்படுகிறது என்பது மறுக்க முடியாத உண்மை.
இந்நிலையில் மெட்ராஸ் என்டர்பிரைசஸ் சார்பில் நந்தகோபால் தயாரிக்க, பிரேம் குமார் இயக்கியுள்ள படம் 96. விஜய் சேதுபதி, த்ரிஷா நடிப்பில் இந்த படம்  கடந்த வார இறுதியில் வெளியானது. தெலுங்கு நடிகர் விஜய் தேவரகொண்டா நடித்த நோட்டா படமும் கடந்த வாரம் வெளியாகியது. இதனிடையே 96 படத்துக்கு சென்னையில் நல்ல ஓபனிங் கிடைத்திருப்பதாக பிரபல ஆன்லைன் ஊடகம் தெரிவித்துள்ளது. சென்னையில் மட்டும் ஒரு நாளில் சுமார் ரூ.1.7   கோடி வசூல் ஈட்டியிருக்கும் என தெரிவித்துள்ளது.  
 
96 படம் குறித்து ரசிகர்களிடையே நல்ல கருத்து நிலவுகிறது. எனவே நிச்சயமாக தமிழகம் முழுவதும் பல கோடி வசூலை ஈட்டும் என தெரிகிறது.