ஞாயிறு, 29 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By VM
Last Updated : சனி, 6 அக்டோபர் 2018 (12:50 IST)

இனிய திருமண நாள் வாழ்த்துக்கள் சமந்தா...!

பிரபல தெலுங்கு  நடிகர் நாகார்ஜுனாவின் மகனும் நடிகருமான நாக சைதன்யாவும், நடிகை சமந்தாவும் ‘ஏம் மாய சேஸாவே’ (தமிழில், விண்ணைத் தாண்டி வருவாயா) படத்தில் முதன்முறையாக இணைந்து நடித்தனர். 
அப்போதிலிருந்தே இருவரும் காதலிக்க தொடங்கினர். அதன் பின்னர் இந்த ஜோடி, மேலும் 3 படங்களில் நடித்தனர். இதனால் இவர்களது காதல் வளர்ந்தது. இரு வீட்டாரின் பெற்றோரும் இவர்களின் காதலுக்கு சம்மதம் தெரிவித்தனர். இதனால் நாக சைதன்யா, சமந்தா ஜோடிக்கு ஹைதராபாத்தில் திருமண நிச்சயதார்த்தம் நடந்தது. தொடர்ந்து இவர்களது திருமணம் கடந்த ஆண்டு அக்டோபர் 6ம்தேதி நள்ளிரவு கோவாவில் கோலாகலமாக நடைபெற்றது. நெருங்கிய உறவினர்கள், நண்பர்கள் மட்டுமே திருமணத்தில் பங்கேற்றனர். 
 
சமந்தா, நாகசைதன்யா ஜோடிக்கு திருமணம் ஆகி ஓராண்டு நிறைவு அடைந்ததால் ரசிகர்கள், திரை உலகினர் வாழ்த்து தெரிவித்து வருகிறார்கள். திருமண வாழ்த்துக்கள் சமந்தா...