வியாழன், 26 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By
Last Updated : வியாழன், 4 அக்டோபர் 2018 (20:51 IST)

நஷ்டத்தை கொடுத்த சமந்தாவின் யூ டர்ன்?

சாலையில் நடக்கும் தொடர் விதிமீறல்களையும், அதனால் ஏற்படும் மரணங்களையும் மைய கருவாக கொண்டு வெளிவந்த படம்  "யு டர்ன்".

இந்த படத்தில் சமந்தா ஒரு பத்திரிக்கையாளராக நடித்திருந்தார்.  மேலும்  ஆதி, ராகுல் ரவிந்திரன், பூமிகா போன்ற முன்னணி நடிகர்கள் நடித்திருந்தனர்.  இந்த படத்தை பவன் குமார் இயக்கியிருந்தார். ஸ்ரீனிவாசா சத்தூரி மற்றும் ராம்பாபு பண்டாரு ஆகியோர் சேர்ந்து படத்தை தயாரித்திருந்தனர். 
 
மிகுந்த எதிர்பார்ப்போடு தமிழகத்தில் கடந்த மாதம் 14 ஆம் தேதி  வெளியான யு டர்ன்  எதிர்பார்த்த அளவுக்கு வசூலை பெற்றுதரவில்லை என்று தகவல் வெளியாகியுள்ளது . ரூ. 9 கோடிகொடுத்து விநியோகஸ்தர்கள் வாங்கிய இந்த படம் வெறும் ரூ 6.50 கோடி மட்டுமே வசூலித்ததாக கூறப்படுகிறது. இந்த திரைப்படத்திற்கு நல்ல வரவேற்பு இருந்தாலும், வசூல் ரீதியாக எதிர்பார்த அளவுக்கு வெற்றி பெறவில்லை என சினிமா வட்டாரங்கள் தெரிவித்துள்ளது.