1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By
Last Modified: சனி, 16 பிப்ரவரி 2019 (11:12 IST)

முஸ்லீம் மதத்திற்கு மாறிய டி.ராஜேந்தர் மகன்

நடிகர், இயக்குனர், இசையமைப்பாளர், அரசியல்வாதி என பல திறமைகள் கொண்ட அஷ்டவாதனி டி.ராஜேந்தர் இந்து மதத்தின் மீது மிகுந்த நம்பிக்கையுடையவர், கடவுள் பக்தி நிறைந்தவர் என்பது அனைவரும் அறிந்ததே.

ஆனால் இன்று அவருடைய மகன் டி.ஆர்.குறளரசன் அவரது முன்னிலையிலேயே முஸ்லீம் மதத்திற்கு மாறியுள்ளார். இதுகுறித்து வெளியாகியுள்ள வீடியோ ஒன்றில் டி.ஆர்.குறளரசன் முஸ்லீம் மதத்திற்கு மாறும் சடங்குகள் நடக்க டி.ராஜேந்தர் அவரது அருகில் உட்கார்ந்துள்ளார். டி.ஆர்.குறளரசன் முஸ்லீம் மதத்திற்கு மாறியது அவரது சொந்த விருப்பமாக கருதப்படுகிறது

தனது மகன் இஸ்லாம் மதத்திற்கு மாறியது ஏன்? என்பது குறித்து இன்னும் சிறிது நேரத்தில் டி.ராஜேந்தர் பத்திரிகையாள்ரகளை சந்தித்து விளக்கமளிக்கவுள்ளதாக கூறப்படுகிறது.