உனக்குக் கண்ணீர்க் கவிதை வடிக்க வைத்துவிட்டதே காலம் – வைரமுத்து, நயன்தாரா இரங்கல்

spb
Sinoj| Last Updated: வெள்ளி, 25 செப்டம்பர் 2020 (15:52 IST)

இந்தியத் திரையுலகில் உள்ள அனைத்து மொழிகளிலும் தன் காந்தர்வக் குரலால் ஐம்பது வருட காலம் தனி சாம்ராஜ்யமே நடத்திவந்து,அனைத்து மக்களின் காதுகளையும் குளிர்வித்து, இதயத்தை இதயமாக்கிய எஸ்.பி.பி இன்று நணபகலில் காலமானார்.

கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு, கடந்த ஐம்பது நாட்களாக எம்ஜிஎம் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, தீவிரக் கண்காணிப்பில் இருந்தவர் சமீபத்தில் தொற்றிலிருந்து குணமடைந்தார் என்றும் விரையில் வீட்டுக்குத் திரும்பவுள்ளார் என தகவல்கள் வெளியான நிலையில், நேற்று மாலை அவரது உடல்நிலை மோசமடைந்தது. கமல்ஹாசன்’’ அவர் நன்றாகயில்லை’’ என்று தெரிவித்தார.

இந்நிலையில் இன்று எஸ்.பி.பி காலமானார் இதுகுறித்து பிரபலங்கள் கண்ணீர் அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.

கவிஞர் வைரமுத்து தனது டுவிட்டர் பக்கத்தில், ஆயிரம் காதல் கவிதைகள் பாடிய உனக்குக் கண்ணீர்க் கவிதை வடிக்க வைத்துவிட்டதே காலம்; இசையை இழந்த மொழியாய் அழுகிறேன். என்று தெரிவித்துள்ளார். #SPBalasubrahmanyam #SPB

நடிகை நயன் தாரா , உங்கள் குரல் எப்போதும் எங்களுடனிருக்க்கும் உங்களுடைய இசைக்காக நன்றி… உங்கள் ஆத்மா சாந்தி அடைய எப்ன்று தெரிவித்துள்ளார்.இதில் மேலும் படிக்கவும் :