திங்கள், 23 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Sinoj
Last Updated : வியாழன், 17 செப்டம்பர் 2020 (20:09 IST)

விஜய் சேதுபதி படத்தின் இரண்டாவது பாடல் ரிலீஸ் ! வைரமுத்து புகழாரம்

தமிழ் சினிமாவில் அறிமுகமாகி தென்னிந்திய சினிமாவில் புகழ்பேற்ற நடிகர் விஜய் சேதுபதி, பாலிவுட் சினிமாவிலும் கால்பதித்துள்ளார்.

இந்நிலையில் அவரது ரசிகர்களுக்கு பெரும் விருந்து வைக்கும் விதத்தில் அடுத்து விஜய் சேதுபதி நடிப்பில் வெளிவரவுள்ள க/பெ ரணசிங்கம்  ஐந்து மொழிகளில் வெளிவரவுள்ளதாக தகவல்கள் வெளியானது.

க/பெ ரணசிங்கம் படத்தில் முதல் பாடல் சமீபத்தில் ரிலீசானநிலையில், கவிஞர் வைரமுத்து இப்படத்தின் இரண்டாவது பாடலை தனது  டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.  புன்னகையே புயலாய் மாறும்போது என்று தொடங்கும் பாடல் வரிகள் இளைஞர்களைக் கவரும்விதத்தில் உள்ளது, பின்னணி இசையும் இனிமையாக உள்ளது.
இதுகுறித்து அவர் கூறியுள்ளதாவது :

க/பெ ரணசிங்கம் படத்தின் இரண்டாம் பாடல் இது. தமிழ்... இதயங்களுக்கு; இசை... செவிகளுக்கு. இந்தப் படம் சின்னதாய் ஒரு தாக்கம் நிகழ்த்தும் என்பது கலைவட்டாரத்தின் கணிப்பு. அது மெய்ப்பட வாழ்த்துகிறேன் என்று தெரிவித்துள்ளார்.
@VijaySethuOffl
@aishu_dil
@Ghibranofficial
@pkvirumandi1

இப்படம் தமிழ் , தெலுங்கு,  மலையாளம் , கன்னடம் ஹிந்தி ஆகிய ஐந்து மொழிகளில் டப் செய்யப்பட்டு  ஓடிடியில் ரிலீசாகிறது.

 இதுகுறித்த முறையாக அறிவிப்புகள் வெளிவரும் என தெரிகிறது. இப்பாடல் வைரலாகி வருகிறது.