’’மதுரைக்காரன் மன உறுதி நோயிலுருந்து காப்பாற்றும்’’ – விஜயகாந்தை வாழ்த்திய வைரமுத்து!

Sinoj| Last Modified வியாழன், 24 செப்டம்பர் 2020 (17:22 IST)

தேமுதிக தலைவர் விஜயகாந்துக்கு கொரனோ தோற்று உறுதி செய்யப்பட்டதாக இன்று காலை அனைத்து ஊடகங்களிலும் செய்தி வெளியானதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

இந்நிலையில் விஜயகாந்த்
மியாட் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு இருக்கும் நிலையில் அவரது உடலில் சீராக இருக்கிறது. அவர் கூடிய விரைவில் முழுமையாக குணம் அடைந்து மருத்துவமனையில் இருந்து வீடு திரும்புவார் என நாங்கள் எதிர்பார்க்கிறோம். இவ்வாறு மியாட் மருத்துவமனையின் நிர்வாக இயக்குனர் வெளியிட்ட அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

இந்நிலையில், நடிகர் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், தனது நண்பரும் நடிகருமான விஜயகாந்தின் உடல்நிலை குறிந்து அவரது மைத்துனர் சுதீஸிடம் தொலைபேசு மூலமாகக் கேட்டறிந்தார்.

இந்நிலையில் கவிஞர் வைரமுத்து தனது டுவிட்டர் பக்கத்தில் விஜயகாந்த் விரைவில் கொரொனாவிலிருந்து மீண்டுவர வேண்டி ஒரு வாழ்த்து பதிவிட்டுள்ளார். அதில், அன்புள்ள கேப்டன்! உங்கள் துணிச்சலும், ‘மதுரைக்காரன்’ என்று கருதும் மன உறுதியும், மருத்துவத்தின் உறுதுணையும் இந்த நோயிலிருந்தும் உங்களை மீட்டெடுக்கும்; வாழ்த்துகிறேன். @iVijayakant #விஜயகாந்த் எனத் தெரிவித்துள்ளார்.இதில் மேலும் படிக்கவும் :