புதன், 25 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Sugapriya Prakash
Last Modified: புதன், 2 செப்டம்பர் 2020 (10:16 IST)

பவண் கல்யாண் பிறந்தநாள் கொண்டாட்டம்: ஷாக் அடித்து தூக்கி வீசபட்ட ரசிகர்கள்!

நடிகர் பவண் கல்யாண் பிறந்தநாளை முன்னிட்டு பேனர் கட்டும் போது ஷாக் அடித்து 4 ரசிகர்கள் பலியாகியுள்ளனர். 
 
தெலுங்கு நடிகர் மற்றும் ஜனசேனா கட்சி தலைவருமான பவண் கல்யாண் பிறந்தநாள் இன்று. இவரது பிறந்தநாளை கொண்டாடும் வகையில் சித்தூர் மாவட்டத்தில் உள்ள குப்பம் அருகே இருக்கும் இவரது ரசிகர்கள் இரவு நேரத்தில் பேனர் கட்டிக்கொண்டிருந்தனர். 
 
அப்போது எதிர்பாராத விதமாக மின்சாரம் பேனரில் உள்ள இரும்பு பிரேம் வழியாக பாய்ந்தது. இதனால் 7 பேர் தூக்கி வீசப்பட்டனர். இந்த சம்பவத்தில் சம்பவ இடத்திலேயே ஒருவர் உயிரிழந்தார். மீதமுள்ளோர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். 
 
அதில் மூவர் உயிரிழந்தனர். மேலும் மூன்று பேர் மருத்துவமனையில் தொடர்ந்து சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்த சம்பவம் சித்தூர் பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.