கிருத்திகா உதயநிதி இயக்கும் அடுத்த படத்தின் ஹீரோ விஜய் சேதுபதியா?
ஜெயம் ரவி மற்றும் நித்யா மேனன் ஆகியோர் நடித்திருந்த காதலிக்க நேரமில்லை படத்தைக் கிருத்திகா உதயநிதி இயக்க ரெட் ஜெயண்ட் மூவீஸ் நிறுவனம் தயாரித்தது. இந்த படம் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு ஜனவரி 14 ஆம் தேதி வெளியானது. திரையரங்குகளில் பெரிய அளவில் தாக்கத்தை இந்த படத்தால் ஏற்படுத்த முடியவில்லை.
கிருத்திகா உதயநிதி ஏற்கனவே வணக்கம் சென்னை மற்றும் காளி ஆகிய படங்களை இயக்கி இருக்கிறார். இந்த படங்களும் வணிக ரீதியாக வெற்றி பெறவில்லை. இந்நிலையில் இப்போது கிருத்திகா தன்னுடைய நான்காவது படத்தை இயக்க தயாராகி வருகிறார்.
இந்த படத்தில் கதாநாயகனாக விஜய் சேதுபதி நடிக்க சம்மதம் தெரிவித்துள்ளதாக சொல்லப்படுகிறது. இதையடுத்து தற்போது திரைக்கதை அமைக்கும் பணிகள் நடைபெற்று வரும் நிலையில் விரைவில் படம் பற்றிய அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் என சொல்லப்படுகிறது. இந்த படத்தை ரெட் ஜெயண்ட் மூவிஸ் நிறுவனம் தயாரிக்கவுள்ளது.