திங்கள், 17 பிப்ரவரி 2025
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Prasanth Karthick
Last Modified: திங்கள், 17 பிப்ரவரி 2025 (11:21 IST)

ரஜினி, கார்த்தி வரிசையில் அர்ஜூன் பட டைட்டிலில் சிவகார்த்திகேயன்! - மதராஸி First Look Poster!

Madharasi

இன்று சிவகார்த்திகேயனின் பிறந்தநாளை சிறப்பிக்கும் விதமாக ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடிக்கும் 23வது படத்தின் டைட்டில் வெளியாகியுள்ளது.

 

தமிழ் சினிமாவில் காமெடி வேடங்களில் தோன்றி நடிகராக வளர்ந்து தற்போது அதிகமான ரசிகர்களை கொண்ட முன்னணி நடிகராக வளர்ந்துள்ளார் சிவகார்த்திகேயன். இவரது அமரன் திரைப்படம் 300 கோடியை தாண்டி வசூலித்து மிகப்பெரும் வசூல் சாதனை படைத்த நிலையில் இவரது அடுத்தடுத்த படங்கள் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

 

இந்நிலையில் இன்று சிவகார்த்திகேயனின் பிறந்தநாளை சிறப்பு செய்யும் விதமாக ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடிக்கும் 23வது படத்தின் டைட்டில் வெளியாகியுள்ளது. இந்த படத்திற்கு ‘மதராஸி’ என பெயர் வைக்கப்பட்டுள்ளது.

 

சிவகார்த்திகேயனின் முந்தைய படங்களான காக்கி சட்டை, மாவீரன், அமரன் உள்ளிட்ட பல படங்களின் டைட்டில்கள் ஏற்கனவே பல முக்கிய நடிகர்கள் நடித்த படங்களில் டைட்டிலாக அமைந்திருந்தது. அந்த வகையில் இந்த ‘மதராஸி’ என்ற டைட்டிலும் முன்னதாக அர்ஜூன் நடித்த படத்தின் டைட்டிலாக உள்ளது குறிப்பிடத்தக்கது.

 

Edit by Prasanth.K