வெள்ளி, 27 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By
Last Updated : செவ்வாய், 1 செப்டம்பர் 2020 (17:37 IST)

வாட்டர் ஹீட்டரை ஆன் செய்துவிட்டு அலட்சியம் – குழந்தையின் உயிரை வாங்கிய சம்பவம்!

வாணியம்பாடியில் குழந்தை ஒன்று வாட்டர் ஹீட்டரை தொட்டதால் மின்சாரம் பாய்ந்து உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடியைச் சேர்ந்த தம்பதிகள் புருசோத்தமன் மற்றும் பவித்ரா. இவர்களுக்கு அனன்யா என்ற பெண் குழந்தை இருந்துள்ளது. புருசோத்தமன் தனது தாய் வீட்டில் கடந்த சில நாட்களாக இருந்துள்ளார். இதனால் மனைவி பவித்ராவும் மகள் அனன்யாவும் மட்டும் வீட்டில் இருந்துள்ளனர்.

அப்போது பவித்ரா குளிப்பதற்காக வாட்டர் ஹீட்டரை ஆன் செய்து வெந்நீர் வைத்துள்ளார். அப்போது அவர் வேறு வேலையாக சென்றுவிட குழந்தை தெரியாமல் குடத்தில் கைவைக்க மின்சாரம் பாய்ந்து சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளது. இந்த சம்பவமானது குழந்தையின் பெற்றோர் மற்றும் உறவினர்கள் இடையெ அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.