1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
  4. Three heroes will act in bala direction

பாலா படத்தில் நடிக்கப் போகும் மூன்று கதாநாயகர்கள்!

பாலா
இயக்குனர் பாலா இயக்கத்தில் அடுத்ததாக நடிக்க ஆர்யா, அதர்வா மற்றும் விஷால் ஆகியவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தப்பட உள்ளதாக சொல்லப்படுகிறது.

இயக்குனர் பாலா தன் நண்பர் விக்ரம்முக்காக அர்ஜுன் ரெட்டி என்ற தெலுங்கு படத்தை ‘வர்மா’ என்ற பெயரில் ரீமேக் செய்தார். ஆனால் அந்த படம் விக்ரம்முக்கும் படத்தின் தயாரிப்பாளருக்கும் திருப்தி இல்லாததால் அந்த படத்தை ரிலீஸ் செய்ய வேண்டாம் என முடிவெடுத்தனர். தமிழ் சினிமா வரலாற்றிலேயே ஒரு படம் முழுவதுமாக எடுக்கப்பட்டு ரிலீஸ் ஆகாமல் வேறு இயக்குனரால் எடுக்கப்பட்டது இல்லை. சீனியர் இயக்குனரான பாலாவுக்கு இது மிகப்பெரிய அவமானத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையத்தில் தனது அடுத்த படத்தை எப்படியாவது வெற்றி பெற வைக்கவேண்டும் என பாலா கடுமையாக உழைத்து வருகிறார்.

அவரின் அடுத்த கதையில் மூன்று கதாநாயகர்கள் பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றனராம். ஏற்கனவே பாலாவின் படத்தில் நடித்த விஷால், ஆர்யா மற்றும் அதர்வா ஆகியோர் நடிக்க அதிக வாய்ப்புள்ளதாக சொல்லப்படுகிறது.
அடுத்த கட்டுரையில்
நீச்சல் உடையில் தெறிக்க விட்ட ஷிவானி! வைரலான புகைப்படம்!