1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
  4. central govt consulting censor for ott platforms

இனிமே No கிளுகிளுப்பு!.. OTT தளங்களுக்கும் சென்சார்!.. மத்திய அரசு அதிரடி முடிவு...

ott
அமெரிக்கா உள்ளிட்ட வெளிநாடுகளில் Netflix, Amazon Prime போன்ற ஓடிடி தளங்கள் ஏற்கனவே பிரபலமாகியிருந்தாலும் இந்தியாவில் கொரோனா ஊரடங்கில்தான் ரசிகர்களிடம் அதிகம் பிரபலமானது. ஏனெனில், தியேட்டர்கள் மூடப்பட்டிருந்ததால் பலரும் ஓடிடி தளங்களை பார்க்க வேண்டியிருந்தது.

ஏனெனில், ஜெய்பீம், சூரரைப்போற்று படங்கள் நேரடியாக ஓடிடியில் வெளியானது.
தற்போது தமிழ் சினிமா ரசிகர்கள் அமேசான், நெட்பிளிக்ஸ், சன் நெக்ஸ் உள்ளிட்ட பல ஓடிடி தளங்களில் திரைப்படங்களையும், வெப் சீரியஸ்களையும் கண்டு ரசிக்கிறார்கள். இதில் முக்கிய விஷயம் என்னவென்றால் சினிமாக்களைப் போல ஓடிடியில் ஒளிபரப்பாகும் படங்களுக்கும், வெப்சீரிய|ஸ்களுகும் தணிக்கை சான்|றிதழ் கிடையாது.

எனவே நிறைய வெப் சீரிஸ்களில் ஆபாச காட்சிகளும், வசனங்களும் இடம் பெறுகிறது.. குறிப்பாக ஆங்கிலம், ஹிந்தி மொழிகளில் உருவாகி தமிழில் டப் செய்யப்பட்டு ஓடிடியில் வெளியாகும் வெப்சீரியஸ்களில் ஆபாசம் அதிக அளவில் இருக்கிறது.

இந்நிலையில், இந்தியாவில் ஓடிடி தளங்களில் வெளியாகும் திரைப்படங்களுக்கும் தணிக்கை சான்றிதழ் கட்டாயமாக்க மத்திய அரசு திட்டமிட்டிருக்கிறது. அதற்கேற்ப தகவல் தொழில்நுட்ப சட்டத்தில் திருத்தங்களை கொண்டு வருவது குறித்து ஆலோசனை நடைபெற்று வருகிறது. எனவே விரைவில் ஓடிடி தளங்களுக்கும் இந்தியாவில் சென்சார் கட்டாயமாகும் என தெரிகிறது..
அடுத்த கட்டுரையில்
அதர்வாவுக்கு ஹிட் கொடுத்ததா இதயம் முரளி?.. முதல் நாள் வசூல் அப்டேட்!...