1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
  4. kvn production says jananayagan coming soon

விரைவில் ஜனநாயகன் ரிலீஸ்!.. புது போஸ்டர் வந்தாச்சி!. அட விஜயே ஷேர் பண்ணியிருக்கார்!...

jananayagan
அரசியலுக்கு வருவதற்கு முன் நடிகர் விஜய் நடித்த திரைப்படம் ஜனநாயகன், விஜயின் கடைசி திரைப்படம் என்பதால் இந்த படத்தை பார்க்க விஜய் ரசிகர்கள் மிகவும் ஆர்வமுடன் காத்திருந்தனர். ஆனால் படத்திற்கு தனக்கு சான்றிதழ் கிடைக்காததால் இந்த படம் திட்டமிட்டபடி வெளியாகவில்லை.

அதன்பின் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டு எதுவும் நடக்காமால் வழக்கு வாபஸ் பெறப்பட்டு படம் மீண்டும் படம் மறுதணிக்கைக்கு சென்றது. ஆனால் பல மாதங்களாகியும் தணிக்கை சான்றிதழ் கிடைக்காமல் இருந்தது.. இந்நிலையில்தான், தற்போது படம் மறுதணிக்கை செய்யப்பட்டு வருகிறது. எனவே, விரைவில் இந்த படத்திற்கு தணிக்கை சான்றிதழ் கிடைக்கவிருக்கிறது. அதிக வன்முறை காட்சிகள் காரணமாக இந்த படத்திற்கு A சான்றிதழ் கொடுக்கப்பட்டிருக்கிறது.

jananayagan

இந்த நிலையில்தான் நடிகர் விஜய் தனது சமூகவலைத்தள பக்கங்களில் ஜனநாயகனின் புதிய போஸ்டரை வெளியிட்டுள்லார். அதேபோல் இந்த படத்தை தயாரித்துள்ள கேவிஎன் நிறுவனமும் ஜனநாயகன் விரைவில் வெளியாகிறது என அதிகாரப்பூர்வமாக தெரிவித்திருக்கிறது.
About Writer
பாலகிருஷ்ணன்
அடுத்த கட்டுரையில்
ஜனநாயகன் புது டிரெய்லர் வீடியோ வருது!.. ரிலீஸ் தேதி அதுதானாம்!...