1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
  4. new trailer of jananayagan movie may release soon

ஜனநாயகன் புது டிரெய்லர் வீடியோ வருது!.. ரிலீஸ் தேதி அதுதானாம்!...

jananayagan
நடிகர் விஜய் அரசியல் கட்சி துவங்குவதற்கு முன் கடைசியாக நடித்த திரைப்படம் ஜனநாயகன். இந்த படத்தில் மமிதா பைஜூ முக்கிய வேடத்தில் நடித்திருந்தார். மேலும் பூஜா ஹெக்டே, பாபி தியோல், பிரகாஷ்ராஜ் உள்ளிட்ட பலரும் நடித்திருந்தனர். விஜயின் கடைசி திரைப்படம் என்பதால் இந்த படத்தின் மீது மிகப்பெரிய எதிர்பார்ப்பு இருந்தது.

கடந்த ஜனவரி மாதம் 9ம் தேதி படம் வெளியாகவிருந்த நிலையில் தணிக்கை சான்றிதழ் கிடைக்காததால் படம் அப்போது வெளியாகவில்லை. ஆறு மாதங்கள் கழித்து தற்போது ஜனநாயகன் படத்திற்கு விடிவுகாலம் பிறந்திருக்கிறது. அதிக வன்முறை காரணமாக இந்த படத்திற்கு A சான்றிதழ் கொடுப்பதாக அறிவித்திருக்கிறார்கள்.

மேலும் காட்சிகள் மற்றும் வசனங்களில் சில மாற்றங்களை செய்யுமாறு தணிக்கை வாரியம் சொல்ல படக்குழு அதை செய்து கொடுத்துவிட்டது. எனவே விரைவில் ஜனநாயகன் படத்திற்கு தணிக்கை சான்றிதழ் கொடுக்கப்படவிருக்கிறது.

மேலும், படம் மறுதணிக்கை செய்யப்பட்டிருப்பதாலும் படத்தின் காட்சிகள் மற்றும் வசனங்களில் மாற்றங்கள் செய்யப்பட்டிருப்பதால் விரைவில் புதிய டிரெய்லர் வீடியோ வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. மேலும், வருகிற 24ம் தேதி இந்த படம் வெளியாகலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
அடுத்த கட்டுரையில்
இனிமே No கிளுகிளுப்பு!.. OTT தளங்களுக்கும் சென்சார்!.. மத்திய அரசு அதிரடி முடிவு...