ஞாயிறு, 29 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By
Last Updated : புதன், 3 ஜூலை 2019 (13:37 IST)

இதனால் தான் மெர்சல் படத்தில் விஜய்யுடன் நடிக்க மறுத்தேன் - ஜோதிகா ஓபன் டாக்!

தமிழ் சினிமாவின்  உச்ச நடிகர் விஜய்யின் திரைப்பயணத்தில் முக்கிய பாலமாக அமைந்த படம் "மெர்சல்" அட்லீ இயக்கத்தில் உருவான இப்படத்தில் விஜய்க்கு ஜோடியாக நித்யாமேனன் நடித்து படத்தை சூப்பர் டூப்பர் ஹிட் அடித்தனர். 

 
மெர்சல் படத்தில் அழகான மனைவியாக நடித்து ரசிகர்களின் உள்ளங்கைகளை வெகுவாக கவர்ந்த நடிகை நிதயமேனனுக்கு சிறந்த நடிகைக்கான  பிலிம்பேர் விருது கிடைத்தது. ஆனால் இந்த ரோலில் நடிக்க நடிகை ஜோதிகாவுக்கு தான் முதலில் வாய்ப்பு கிடைத்தது. ஆனால் அவர் நான் இந்த ரோலில் நடிக்கமாட்டேன் என நிராகரித்துவிட்டார். இதனால் பலரும் அவரை விமர்சித்து வந்தனர். 
 
தற்போது இதற்கான காரணத்தை நடிகை ஜோதிகா பேட்டி ஒன்றி கூறியுள்ளார், அதாவது "படத்தின் ஸ்கிரிப்ட் பற்றி எனக்கும் இயக்குனருக்கும் கருத்து வேறுபாடு ஏற்பட்டது. அதனால் படத்தில் இருந்து விலகிவிட்டேன். creative difference மட்டும் தான் காரணம்" என ஜோதிகா கூறியுள்ளார்.