நேர்கொண்ட பார்வை vs பிகில் வியாபாரம் – அஜித்தை முந்திய விஜய் !

Last Modified புதன், 3 ஜூலை 2019 (10:27 IST)
விஜய் நடித்துள்ள பிகில் மற்றும் அஜித்தின் நேர்கொண்ட பார்வை ஆகியப் படங்களின் வியாபாரங்கள் ஆரம்பித்துள்ளன.

விஜய் நடித்துள்ள பிகில் மற்றும் அஜித் நடித்துள்ள நேர்கொண்ட பார்வை ஆகிய இரண்டு படங்களின் தமிழக திரையரங்க உரிமைகளையும் ஸ்க்ரீன் சீன் நிறுவனம் கைப்பற்றியுள்ளது. பிகில் படம் தீபாவளியை முன்னிட்டு வெளியாவதால் அதன் வியாபாரம் இப்போதே ஆரம்பித்துள்ளது.

விஜய்யின் சர்கார் படத்தின் வெற்றியால் பிகில் படத்துக்கு மிகப்பெரிய எதிர்பார்ப்பு உருவாகியுள்ளது. அதனால் அந்த படத்தை 70 கோடி ரூபாய் கொடுத்து விநியோக நிறுவனம் கைப்பற்றியுள்ளது. இந்த தொகை இதுவரை விஜய் படத்துக்கு கொடுக்கப்பட்ட தொகைகளில் மிக அதிகமாகும்.

அதேப்போல அஜித் நடிப்பில் உருவாகி வரும் நேர் கொண்ட பார்வைப் படம் ஆகஸ்ட் 1 ஆம் தேதி வெளியாக இருக்கிறது. இந்தப் படத்துக்கும் மிகப்பெரிய எதிர்பார்ப்பு இருந்தாலும் வணிக அம்சங்கள் கொண்ட படம் இல்லை என்பதால் இதன் வியாபார எல்லை கம்மியாகவே உள்ளது. 55 கோடி முதல் 60 கோடி வரை இதன் தமிழக விநியோக உரிமைப் போக வாய்ப்புள்ளதாக சினிமா வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.இதில் மேலும் படிக்கவும் :