புதன், 25 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By
Last Modified: புதன், 3 ஜூலை 2019 (13:16 IST)

முழுக்கடனையும் செலுத்துகிறேன் – லண்டனில் விஜய் மல்லையா மேல் முறையீடு !

லண்டனில் நடந்த வழக்கு விசாரணையில் விஜய் மல்லையாவின் மேல் முறையீட்டு மனு ஏற்றுக்கொள்ளப்பட்டதால் அவரை நாடு கடத்துவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.

இந்திய வங்கிகளில் ரூ.9 ஆயிரம் கோடி கடன் பெற்ற தொழிலதிபர் விஜய்மல்லையா, கடனை திரும்ப செலுத்தாமல் பிரிட்டனுக்கு தப்பியோடிவிட்டார். அவரை இந்தியா அழைத்து வர மத்திய அரசு சட்டரீதியாக எடுத்த முயற்சியின் அடிப்படையில் விஜய் மல்லையாவை இந்தியாவுக்கு நாடு கடத்தலாம் என  கடந்த ஆண்டு டிசம்பர் 10ஆம் தேதி இங்கிலாந்து நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது. இந்த நிலையில் இங்கிலாந்து நீதிமன்றத்தின் இந்த உத்தரவை எதிர்த்து மல்லையா மேல் முறையீடு செய்ய தொடர்ங்து முயற்சி செய்து வருகிறார்.

இந்நிலையில் அவர் தொடர்ந்த மேல் முறையீடு மனுவை விசாரித்த லண்டன் நீதிமன்றம்  மேல் முறையீடு வழக்கைத் தொடர்ந்து நடத்திக்கொள்ள அனுமதி வழங்கியுள்ளது. இதனால் அவரை இந்தியாவிற்கு அழைத்து வருவதில் தாமதம் ஏற்பட்டுள்ளது. இதனை அடுத்து டிவிட்டரில் விஜய் மல்லையா ’கடவுள் இருக்கிறார். நீதி வென்றுள்ளது. நான் பெற்ற கடன் முழுவதையும் திருப்பிக் கொடுக்கத் தயாராக உள்ளேன். வங்கிகள் அதைப் பெற்றுக்கொள்ள வேண்டும். அதுபோல கிங்பிஷர் ஊழியர்களின் சம்பளத்தையும் கட்ட நான் தயாராக இருக்கிறேன்’ எனத் தெரிவித்துள்ளார்.