"பிகில்" படத்தின் தமிழக உரிமையை வாங்கிய பிரபல நிறுவனம் - அதிகாரப்பூர்வ அறிவிப்பு!

Last Updated: செவ்வாய், 2 ஜூலை 2019 (15:16 IST)
தமிழ் சினிமாவின் தலையாய நடிகர் தளபதி விஜய்யின் பிகில் திரைப்படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் , செகண்ட் லுக் போஸ்டர் என அடுத்தடுத்து வெளிவந்து விஜய் ரசிகர்களை கொண்டாட்டத்தில் ஆழ்த்தியது. 

மைக்கேல் என்ற கதாபாத்திரத்தில் கால்பந்தாட்ட வீரராக மகன் விஜய், மற்றும் ராயப்பன் என்ற அப்பா கதாபாத்திரத்தில் மற்றொரு விஜய் என இரட்டை வேடங்ககளில் விஜய் நடிக்கும் பிகில்  படத்தின் அப்டேட்டுகளை படத்தின் தயாரிப்பாளரான அர்ச்சனா கல்பாத்தி சமீபத்தில் வெளியிட்டிருந்தார். 
 
விஜய் பிறந்த நாளில் இந்த இரண்டு போஸ்டர்களை சமூகவலைகளங்களில் அதிக அளவில் ஷேர் செய்து விஜய் ரசிகர்கள் கொண்டாடி தீர்த்தனர். தமிழ் சினிமாவின் முன்னணி நடிகரின் படம் என்பதால் பல முன்னணி நிறுவனங்கள் இப்படத்தின் முறைமையை வாங்க போட்டிப்போட்டனர். 


 
இந்நிலையில் பிகில் படத்தின் தமிழக உரிமையை வளர்ந்துவரும் ஒரு முன்னணி கம்பெனியான ஸ்கிரீன் சீன் நிறுவனம் கைப்பற்றியுள்ளது.  இந்த தகவலை தற்போது ஏ.ஜி.எஸ் நிறுவனமே 
அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது..


இதில் மேலும் படிக்கவும் :